அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியா குமரி மாவட்டம் திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா, 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஒடிஷா அருகில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் அக்., 2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- திருக்காட்டுப்பள்ளி கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலில் குரல் கொடுத்தது நான்தான். விஜய்யும் இப்போது குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ”என்று சீமான் கூறினார்.
- மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
- திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- திராவிட-தமிழ் தேசிய போரில் வெல்ல போவது யார்? செந்தமிழன் சீமானுடன்…
- நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.