இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 1,800க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துகளில் ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தை போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட வெளியிட்டுள்ளார்.

வீதி விபத்துகளால் நாளாந்தம் சுமார் ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வீதி பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார.

அதேநேரம், வீதி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!