“83 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து பணம் பறித்தல்” – இலங்கையில் இருவர் காவலில் வைக்கப்பட்டனர்.

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத தருவதாக கூறி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08.09.2025) உத்தரவிட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆணும் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெரகொல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவர் கணேமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத தருவதாக கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பறித்துள்ளதாகவு் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!