ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்தார். இது தொடர்பாக, அவர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ”மறக்க முடியாத அனுபவம்” என பதிவிட்டுள்ளார்.

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று (அக் 29) ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ரபேல் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரின் போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ரபேல் போர் விமானத்திற்கு மவுசு கூடியது.
- The seizure of Tamil homeland under the guise of archaeology: The Sinhalese-Buddhist Chauvinist Injustice Unfolded in Kiran and the Courageous Rejection by the Tamil National Local Council in Defence of Ancestral Tamil Lands!
- இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு வாரம் தொடங்கப்பட்டது!
- இரான்–இஸ்ரேல் பதற்றம் தீவிரமாவதை இந்தியா கவனமாக கண்காணிப்பு.
- சின்னையா வீராயி | புகழ் வணக்கம் | 14.09.2025
- மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை யை போது ரபேல் போர் விமானத்தின் பங்கு முக்கியத்துவமாக இருந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பயணம் செய்து இருக்கிறார்