Wednesday, April 1, 2026

புத்தளம் பகுதியில் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

0 comments

அத்துடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள மீன்பிடி குடிசையில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை குடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர், மீன்பிடி குடிசையில் மற்றொரு நபரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00