Saturday, October 31, 2026
Home தமிழகம்சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது.

by Amizhthu

சென்னையில் இன்று (அக் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகிறது. இம்மாதம், 17ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,200 ரூபாயாகவும், சவரன், 97,600 ரூபாயாகவும் அதிகரித்தது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 27) தங்கம் கிராம், 11,450 ரூபாய்க்கும், சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக் 28) காலை தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 3,000 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் இன்று (அக் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Reply