முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29.10.2025) காலை ஆஜராகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்டதையடுத்து, ரணில் விக்ரமசிங்க வழக்கு விசாரணைக்காக தற்போது நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு வாரம் தொடங்கப்பட்டது!
- இலங்கை வழக்கறிஞர் கொலை: குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தல் – இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம்
- கடுவளை – வெலிவிட்ட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
- “சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் தெரியாத உள்ளடக்கங்கள் குறித்து மக்கள் கவலை.” – கவிந்த
- இலங்கை மக்களை ஏமாற்றிய பொய்க்காரர்களை ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பின்னரே எமது பயணம் முடிவுக்கு வரும். – ஹரின் பெர்னாண்டோ.