தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது.

இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.
இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போனது தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவிக்கையில்,
ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்ற பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
- கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
- மக்கள் ஆணை என்பது மாற்றமடையும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – முஜிபுர் ரஹ்மான்
- மீனவர்களை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி.
- வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இலங்கை விமான நிலையத்தில் சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கைபேசிகளுடன் ஐந்து சீன நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
- அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது காணாமல் போன அனகொண்டா பாம்புக் குட்டி இதற்கு முன்னர் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.