அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று வியாழக்கிழமை (30.10.2025) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.
- சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம்: “சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மகேஷ் கட்டுலந்தவின் அறிக்கை.
- இலங்கையில் 41 மருத்துவமனைகளில் 10,166 பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை!
- இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்
- சர்ச்சைக்குரிய ஆங்கில புத்தக தொகுப்பு தொடர்பில் அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை? – நளின் பண்டார
- போரால் வீடிழந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்க அரசு உறுதி — ஜனாதிபதி
சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.