ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது:

இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும். ரஷ்ய எண்ணெய் காரணமாக இந்தியாவின் மீதான வரிகள் அதிகமாக உள்ளன. இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம்.

இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன். மிக முக்கியமான சர்வதேச உறவுகளை செர்ஜியோ வலுப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். எரிசக்தி ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க உதவுவார். அமெரிக்க தொழில்கள், தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

இந்தியாவிற்கான அமெ ரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர் கூறியதாவது: அமெரிக்காவுக்கான சிறந்த பணியை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன், என்றார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.