இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸின் தென் ஆப்ரிக்க அணி, 489 ரன்கள் சேர்த்தது.

அதனையடுத்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் தென் ஆப்ரிக்க அணியின் புவுலர்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்ரிக்க பவுலர் மார்கோ ஜேன்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, 288 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
3வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 2வது இன்னிங்ஸில் 26 ரன்கள் சேர்த்து, 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- T20 உலகக் கோப்பை முன் பாதுகாப்பு பதட்டம்: பங்களாதேஷ்–இந்தியா விவகாரம் தீவிரம்
- தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து வங்கதேசம் வெற்றி பெற்றது.
- புனித சங்கமத்தில் பக்தர்களின் ஆன்மிக நீராடல்
- “டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது.” மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- “காங்கிரஸ் எல்லைகளைத் திறந்ததால்தான் அசாமில் ஊடுருவல் அதிகரித்தது” – அமித் ஷா