
காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார்.
கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இணைந்து கிணற்றில் விழுந்த கைதியை காப்பாற்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றியதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாவது விருப்ப நெறிமுறையை உறுதி செய்ய வேண்டும்.
- Longing for Liberation: The Prabhakaran Epic
- இலங்கையில் மழை தொடரும். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- வவுனியாவில் 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47’இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- Applications Open for Interest-Free Student Loan Scheme in Sri Lanka