அஹங்கம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலி

அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் நீண்ட நேர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!