அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை

அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27-01-2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஆவார்.

சம்பவத்தன்று, குறித்த யுவதி தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் யுவதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!