பாக்கு நீரிணை பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று காலை கைது!

பாக்கு நீரிணை பகுதியில் இலங்கை கடற் பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (16-02-2025) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.