இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் உள்ள தொழில்துறை பகுதியில் ரசாயன ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று (பிப்ரவரி 16) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தீப்பற்றி மளமளவென பரவ தொடங்கியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் தீயில் கருகி தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும்படி நடந்து வருகிறது. உடல் முழுவதும் தீயில் எரிந்து உள்ளதால் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.