புலம்பெயர் தமிழர்கள் முதன்மை செய்திகள் தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் லாண்டாவ் நோக்கி பயணிக்கிறது Amizhthu20 February 2026032 views மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் 12.02.2026 அன்று பிரித்தானியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 01.03.2026 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது. தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 7 ம் நாள் ஈருருளிப் பயணமானது கடந்த மாதம் 28.08.2025 அன்று பிரித்தானியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பித்த நாள் தொடக்கம் பலவேறு நகரங்களை ஊடறுத்து பல்வேறு சாதிப்புகளை நடத்த திட்டமிட்ட நிலையில் 8 ம் நாளான இன்று (19.02.2026 ) இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது