Poem - கவிதை பார்வதி அம்மாளின் மறைவு குறித்து கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் மல்கக் கவிதை! Amizhthu20 February 2026023 views இருக்கிறானா ? இல்லையா ?’ புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின்மாதாவே ! – நீமணமுடித்தது வேலுப்பிள்ளை ;மடி சுமந்தது நாலு பிள்ளை !நாலில் ஒன்று – உன்சூலில் நின்று – அன்றேதமிழ் ஈழம்தமிழ் ஈழம் என்றது ; உன் –பன்னீர்க் குடம்உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின்கண்ணீர்க் குடம்உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறுதோளுயர்த்தி நின்றது ;நீல இரவில் – அதுநிலாச் சோறு தின்னாமல் –உன் இடுப்பில்உட்கார்ந்து உச்சி வெயிலில் –சூடும் சொரணையும் வரசூரியச் சோறு தின்றது; ★★★★★ அம்மா !அதற்கு நீயும் –அம்புலியைக் காட்டாமல்வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,தினச் சோறு கூடவேஇனச் சோறும் ஊட்டினாய்;நாட்பட –நாட்பட – உன்கடைக்குட்டி புலியானது;காடையர்க்கு கிலியானது ! ★★★★★ ‘தம்பி !தம்பி !’ எனநானிலம் விளிக்க நின்றான் – அந்தநம்பி;யாழ்வாழ் –இனம்இருந்தது – அந்த…நம்பியைநம்பி;அம்மா ! அத்தகு –நம்பி குடியிருந்த கோயிலல்லவா –உன்கும்பி ! ★★★★★ சோழத் தமிழர்களாம்ஈழத் தமிழர்களை…ஓர் அடிமைக்குஒப்பாக்கி; அவர்களதுஉழைப்பைத் தம் உணவுக்குஉப்பாக்கி;செம்பொன்னாய் இருந்தோரை –செப்பாக்கி; அவர்கள் வாழ்வைவெட்டவெளியினில் நிறுத்திவெப்பாக்கி;மான உணர்வுகளைமப்பாக்கி; தரும நெறிகளைத்தப்பாக்கி –வைத்த காடையரைவீழ்த்த…தாயே உன்தனயன் தானே –தந்தான்துப்பாக்கி ! ★★★★★ ‘இருக்கிறானா ?இல்லையா ?’எனும் அய்யத்தைஎழுப்புவது இருவர் ;ஒன்று –பரம்பொருள் ஆன பராபரன்;இன்னொன்றுஈழத்தமிழர்க்கு –அரும்பொருள் ஆனபிரபாகரன் ! ★★★★★ அம்மா ! இந்தஅவல நிலையில் – நீ…சேயைப் பிரிந்ததாயானாய்; அதனால் –பாயைப் பிரியாதநோயானாய் !வியாதிக்கு மருந்து தேடிவிமானம் ஏறி –வந்தாய் சென்னை; அது –வரவேற்கவில்லை உன்னை !வந்தவழிபார்த்தே – விமானம் திரும்பியது; விமானத்தின்விழிகளிலும் நீர் அரும்பியது ! ★★★★★ இனிஅழுது என்ன ? தொழுது என்ன ?கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்கன்ன வயல்களை உழுது என்ன ?பார்வதித்தாயே ! – இன்றுனைப்புசித்துவிட்டது தீயே !நீ –நிரந்தரமாய்மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்தங்க இடம்தராத – எங்கள்தமிழ்மண் –நிரந்தரமாய்த்தேடிக்கொண்டது பழி ! – கவிஞர் வாலி