சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

by
0 comments

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர்.

இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது. அவர்களை் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அதேபோல், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரையும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

banner

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00