திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர்.
இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது. அவர்களை் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரையும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- பண்டைய ஈரன்மய காலத்தின் அதிசயம்: தமிழ்நாட்டில் இந்தியாவின் நீளமான ஈரன்மய ஈட்டி கண்டுபிடிப்பு
- 🌤️ இன்றைய தமிழ்நாடு வானிலை நிலவரம்
- 🌧️ வானிலை எச்சரிக்கை: தமிழ்நாட்டில் கனமழை முன்னறிவிப்பு.
- பாஜக அடுத்த அரசியல் எல்லையாக தமிழ்நாட்டை நோக்குகிறது என்கிறார் நாகேந்திரன்
- “ஸ்டாலினை ஆயிரம் விளக்கிலும், உதயநிதி சேப்பாக்கத்திலும், கனிமொழி திருச்செந்தூரிலும் போட்டியிட” தி.மு.க.’வினர் விருப்ப மனு அளித்தனர்.
- 🎙️செந்தில்நாதன் பேட்டி | திருமாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது | இஸ்ரேலில் தமிழ்