கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான கே.என். பணிக்கர் (90) நேற்று முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நவீன இந்திய வரலாற்றை படிப்பதில் முற்போக்கான கண்ணோட்டங்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பணிக்கர்.
கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் பிறந்த இவர், தன் உயர்படிப்புக்குப்பின் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் வரலாற்று ஆசிரியராக இணைந்தார். அதன்பின், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த 2001 – 17 வரை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்திய வரலாற்றில், காலனித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்து பல படைப்புகளை இயற்றியுள்ளார்.
வரலாற்று துறையில் மார்க்சிய கொள்கையையும், மதசார்பற்ற மற்றும் அறிவியல் அணுகுமுறைகளை ஆதரித்ததற்காகவும் பரவலாக இவர் அறியப்பட்டார்.
- இன்ஸ்டாமார்ட் வளர்ச்சியால் ஸ்விக்கி காலாண்டு இழப்பை குறைத்தது
- புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில்; “தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.” என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- கணவன் கொலை வழக்கில் மனைவி மற்றும் துணை ஆண் கைது — விசாரணை தொடர்கிறது
- இந்தியா–ஜெர்மனி 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்திய பயணிகளுக்கு ஜெர்மனியில் விசா‑இல்லா டிரான்சிட்
- இந்தியா-ஜப்பான் உறவுகள் அவசியம்: இந்தியப் பிரதமர் மோடி உறுதிப்படுத்துகிறார்.
- “நீதியின் வெளிச்சம் இந்திய நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்” என இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.
இவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், இரண்டு மகள்களுடன் பணிக்கர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.