”உயர் நீதிமன்ற அனுமதியுடன், ‘தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு’ மாநாட்டை நடத்தியே தீருவோம்,” என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

முறையாக அனுமதி பெற்று, மாநாடு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாகக் கூறி, மாநாட்டுக்கு தி.மு.க., அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு, காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்த, காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

மாநாட்டிற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.