தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை; விறகு அடுப்புகளுக்கு மாறும் சூழ்நிலை!

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மேற்காசிய பகுதியில் நடந்துவரும் போர்ச்சூழல் காரணமாக உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் பாதித்துள்ளது.

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதோடு, முக்கிய நகரங்களில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்களின் இருப்பு குறைந்து வருவதால், உணவு தயாரிக்க முடியாமல் ஓட்டல் வியாபாரம் கடுமையாக பாதித்துதுள்ளது.

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகளை மேற்கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்திய நிலையில், பல ஓட்டல்கள் விறகடுப்புக்கு மாறி வருகின்றன. மதுரையில் சிறிய ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை விறகடுப்பில் உணவு தயாரிக்க முடிவெடுத்துள்ளன.

இதற்காக கிச்சன்களில் மாற்றங்களை செய்து வருகின்றன. விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி விறகு விற்பனையாளர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தும் வருகின்றனர். இதனால் விறகு விலையும் உயர வாய்ப்புள்ளது.

விறகு விற்பனையாளர் மனோகரன் கூறியதாவது: திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தான் வழக்கமாக விறகு சப்ளை செய்யப்படுகிறது.மற்றபடி வியாபாரம் பெரிதாக இருக்காது. ஒரு டன் விறகு ரூ.10 ஆயிரம் வரை தற்போது விற்கிறது. திடீர் ஆர்டர்களால் விறகுகளை வெட்ட, உலர வைக்க, கூலியாட்களுக்குடன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவாகும். இதனால் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.