தமிழகம்: பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்களான நிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்ற விபரத்தை வெளியிடாமல், தேர்தல் கமிஷன் தாமதம் செய்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல், கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.87 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 85.10. தேர்தலில், 86 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.

வழக்கமாக ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்று இரவு தோராயமான சராசரியாக ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; மறுநாள் துல்லியமான இறுதி விபரம் வெளியிடப்ப டும்.

மேலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக ஆண்கள், பெண்கள், மூன் றாம் பாலினத்தவர் என ஒவ்வொரு தரப்பிலும் எவ்வளவு பேர் ஓட்டளித்துள்ளனர் என்ற விபரங்களும் வெளியிடப்படும்.

ஆனால், இம்முறை ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்களாகியும், சட்டசபை தொகுதி வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை தேர்தல் கமிஷன் இதுவரை வெளியிடவில்லை.

சட்டசபை தொகுதிவாரியாக பதிவான ஓட்டுகள் விபரத்தை வெளியிட, தமிழகத்தில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததே, இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், ‘அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விபரத்தை சரிபார்த்து, இறுதி விபரத்தை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு விட்டது. எனவே, ஓட்டுப் பதிவின் முழு விபரங்கள் இன்று வெளியிடப்படும்’ என்றனர்.

Related posts

‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள்

கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, ​​சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷின் வேதனை