கோடை வெப்பத்தின் உச்சம் எனக் கருதப்படும் “கத்திரி வெயில் காலம்” இன்று தொடங்குகிறது.

கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம், வழக்கத்தை விட 3 டிகிரிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இருப்பினும், மே 4 முதல் 28ம் தேதி வரையிலான 24 நாட்கள் கத்திரி வெயில் காலமாக வரையறுக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக, உச்சபட்ச வெப்பம் பதிவாகும்.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், 8; மதுரை மாவட்டம் சோழவந்தான், சாத்தியார் தலா, 7; ஆண்டிப்பட்டி, தானியமங்கலம் பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சத்தீஸ்கர் தெற்கு முதல் தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்தின் குமரிக்கடல் வரை, நிலத்தில் இருந்து 1.5 கி.மீ., உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரியில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று முதல் வரும் 7 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பத்தால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படலாம்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.