உதயநிதி ஸ்டாலின்: கடந்த தேர்தலில் 69, இந்தத் தேர்தலில் வெறும் 45.

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு அரசியலுக்குள் வந்தவர் உதயநிதி. வந்தவுடன் அவருக்கு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே அமைச்சர் பதவியும் வந்தது. சிறிது காலத்திலேயே துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது.

ஆனால், அந்த பதவியின் கண்ணியத்துக்கு தக்கபடி நடந்து கொள்ளாமல், வாய்க்கு வந்ததை பேசி மக்களின் வெறுப்புக்கு ஆளானார் உதயநிதி. கடந்த 2021 தேர்தலில் புதுமுகமான அவருக்கு 93,285 பேர் ஓட்டளித்துள்ளனர். இது, பதிவான 1,35,344 ஓட்டுகளில் 69 சதவீதம்.

ஆனால், இந்த தேர்தலில் அவருக்கு கிடைத்த ஓட்டுகள் 62,992 மட்டுமே. இது, மொத்தம் பதிவான 1,40,098 ஓட்டுகளில் 45 சதவீதம் ஆகும். முந்தைய தேர்தலில் பதிவான ஓட்டுகளை விட, உதயநிதிக்கு 24 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – தமிழக முதல்வர்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.