காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளது.

வவுனியா செட்டிகுளம், வீரபுரம் மற்றும் முகத்தான்குளம் 2ம் பன்னை ஆகிய கிராமங்களிற்குள் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.

நேற்று இரவும் குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னைபயிர்களையும் பயன்தரும் மரங்களையும் நாசமாக்கிச்சென்றுள்ளது.

குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலே கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை வேலியை அமைத்து தருமாறு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.