மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கோரி, தவெக கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் “உண்மையில்லை.” – செயலர் சண்முகம்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கோரி, தமிழக வெற்றிக் கழகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ”அது உண்மையில்லை,” என, அக்கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, த.வெ.க.,விடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்தால் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

” மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்,” என்றார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.