சிறப்புச் செய்தி: வினாத்தாள் கசிவு; இந்தியாவில் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி, முழுமையான பாதுகாப்பு நடைமுறையின் கீழ் நடத்தப்பட்டது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ராஜஸ்தானில் நடந்துள்ளது என தேசிய தேர்வுகள் முகமைக்கு புகார்கள் வந்தன.

அதன்படி வினாத்தாள் கசிந்ததா என்று விசாரணை நடந்தது. இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பிடிபட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!