பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்து உள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது:மேற்கு ஆசிய நெருக்கடி நீடித்தால், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றாமல் வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம். மோதல் தொடர்வதால், கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுசெய்து வருகின்றனர். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!