எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா 6 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது

எரிபொருள் விலை உயர்வு காரணமாக 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என யார் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, 6 சர்வதேச விமான சேவைகள் ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:

வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6ம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டாலும் 1200 சர்வதேச விமான சேவைகள் தொடரும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.