கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

கேரளாவில் முதல்வர் யார் என்ற விவரம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

கேரளாவில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும் முதல்வர் பதவிக்கு யாரை தேர்ந்து எடுப்பது என்பதில் காங்கிரசுக்குள் கடும் குழப்பம் நிலவி வருகிறது. கே.சி. வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகிய 3 பேர் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி நிலவியதே இதற்கு காரணமாகும்.

தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்ததால் டில்லியில் இருந்து காங். மேலிடக் குழுவினர் கேரளா வந்து ஆலோசனை நடத்தினர். ஆயினும், இழுபறி முடிவுக்கு வராததால் முதல்வர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கே.சி.வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகிய 3 பேரையும் டில்லிக்கு அழைத்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதும் பிரச்னைக்கு தீர்வு எட்டவில்லை.

இந் நிலையில் நாளை முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் டில்லி தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி இருப்பதாவது;

வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரை முதல்வராக தேர்ந்து எடுக்கலாம் என்ற அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி உள்ளனர். அதன்படி காங்கிரஸ் மேலிடம் அனைத்து ஆலோசனைகளையும் மேற்கொண்டு முடிவை எடுத்துள்ளது. கேரளா முதல்வர் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (மே 14) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா 6 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது

விஜய நாராயண் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.