பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
- 20.11.1992 அன்று தமிழீழ கடடபரப்பில் வீராகவியமான “தமிழக மாவீரர்” கடற்புலி கப்டன் ஈழவேந்தன் (டில்லி)
- ஜெனீவா சூதாட்டம்: அணுசக்தி இராஜதந்திரம், இராணுவ அழுத்தம் மற்றும் பிராந்தியப் போர் அபாயம்
- திலீபன் அவர்களதும், சங்கர் அவர்களதும் நினைவேந்தல் நிகழ்வு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெல்சியம்.
- விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் – தமிழீழத் தேசியத் தலைவர்.
- தமிழர் மனங்களில் ஆழவேரூன்றிய சினிமா மோகம்: ஓர் உளவியல் மற்றும் அரசியல் பகுப்பாய்வு
- உயிரியல் பாதுகாப்பு, புவிசார் அரசியல் போட்டி மற்றும் உக்ரைன் ஆய்வக சர்ச்சை