வெற்றிக்கு சில ரகசியங்கள் தேவை !
Seeman – சீமான்
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் புதிய விடியல் குழு அமைப்பின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், ‘புதிய விடியல்’ நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
சிலம்பம் பிரிவில்தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவக் கண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்தநல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
8,000 ரூபாய் கூப்பனுக்காக முதலமைச்சர் பதவியைத் தருவீர்களா? ஸ்டாலினிடம் சீமன் கேள்வி எழுப்பினார்.
“தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் ஆலந்துார், அம்பத்துார், வில்லிவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
அனைத்து மதங்களுமே மது குடிப்பது பாவம் என கூறினாலும், அரசே அதை விற்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பிறகும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் தருகின்றனர்.
அப்படியென்றால், ஒரு நாளைக்கு, 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில், தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சியாளர்கள், மக்களை வறுமையில் வைத்துள்ளனர்.
இப்போது ஐந்தாண்டு ஆட்சிக்கு பின், 2,000 ரூபாய் கொடுக்கிறோம் என்றால், வறுமை வளர்ந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
அவர்கள் அறிவிக்கும் 2,000 ரூபாய், 2,500 ரூபாய், 8,000 ரூபாய் கூப்பன், 10,000 ரூபாய் வறுமை ஒழிப்பு தொகை போன்றவற்றை, எங்கிருந்து தருவர் என்ற கேள்வி எழாத வரை, மாற்றம் ஏற்படாது.
இலவசங்கள் அறிவித்தால் தான் ஓட்டு என்றால், ‘௧ கிலோ தங்கம், கார், அதற்கு பெட்ரோல், ஊதியத்துடன் ஓட்டுநர்’ என நான் தருவதாக சொன்னால் ஏற்பீர்களா? அப்படி கொடுத்தால், உங்களுக்கு படிப்பு, தகுதியெல்லாம் எதற்கு?
தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா? பைத்தியங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம்; உதயசூரியனுக்கு போடுங்கள். ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்; நாடு, சுடுகாடாக மாறட்டும்.
இதற்கு முன், இரண்டு வயது குழந்தையை தான் கற்பழித்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கருவில் இருந்து வெளியே வந்தவுடனேயே கற்பழித்து விடுவர். நல்லாட்சி அமைய, சிந்தித்து ஓட்டு போடுங்கள். இல்லையென்றால் குவார்ட்டர் குடித்து விட்டு, வீட்டில் படுத்திருங்கள்.
அரை சதவீதம் ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட, கூட்டணி பேரம் நடத்தியவர்கள், என்னிடம் எப்படியெல்லாம் பேரம் பேசியிருப்பர்.
நேற்று கூட, கூட்டணி பேச்சு நடந்தது. குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுந்து போட்டியிடுங்கள். அங்கு நாங்கள் வாபஸ் பெறுகிறோம். மற்ற தொகுதிகளில் நீங்கள் வாபஸ் பெறுங்கள் என்றனர். நான் நிராகரித்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 30ம் தேதி காரைக்குடியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இரு மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார்; காரைக்குடியில் அவர் போட்டியிடுகிறார்.
புதுச்சேரியில் ஏப்., 9ல் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2021 தேர்தலில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 28ல் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம், கேரளா பகுதியில் உள்ள மாஹி தொகுதிகளை தவிர, மற்ற 28 தொகுதிகளிலும் அக்கட்சி களமிறங்கியது.
அந்த தேர்தலில், 3.37 சதவீத ஓட்டுகளுடன் நான்காவது இடம் பிடித்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 4.90 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. இந்நிலையில், புதுச்சேரியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 20, 21ம் தேதிகளில் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், வரும் 30ல் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஏப்., 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே, தமிழக தேர்தலுக்காக, கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை சீமான் துவக்குகிறார்.
‘ஓட்டு விற்பனைக்கா ? விவசாயிக்கா ?’
‘உங்கள் ஓட்டு விற்பனைக்கா?, விவசாயிக்கா? என்ற முழக்கத்துடன், நா.த.க., வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
தேர்தல் கமிஷனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, போஸ்டர், பேனர் வாயிலாக பிரசாரத்தை அக்கட்சி வேட்பாளர்கள் துவக்கிய நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, ‘உங்கள் ஓட்டு விற்பனைக்கா, விவசாயிக்கா’ என்ற முழக்கத்தை முன்வைத்து, நா.த.க., வேட்பாளர்கள் நேற்று பிரசாரத்தை துவக்கினர்.
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் – ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!
மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 9, 2026
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன்… pic.twitter.com/P0eiZkxDa9
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்.
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக, இலங்கையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் தமிழர்கள் பலர், தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். போதிய முகாம் இல்லாததால், கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்திருப்பது, மனதை கனக்க செய்கிறது.
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விமான நிலையத்தில், கடந்த மூன்று நாட்களாக, உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் அதிகமானோரை, தாயகம் அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், கனமழை வெள்ளத்தால், இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு, தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும்’ இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
“திமுக, அதிமுக’வை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?” – சீமான்
திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது. எந்த கொம்பனாலும் என திமுக சொல்கிறது. தனியாக போகும் போது பாட்டு பாடி செல்கிறீர்கள் என்றால் பயந்து விட்டீர்கள் எனப் பொருள், பேய் பிசாசு வருகிறது என்று அது போல் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் கூட வைத்துக் கொண்டு, ஓட்டுக்குக்கு காசு தேவைப்படுகிறது. பிறகு எந்த கொம்பனாலும் என்னை வீழ்த்த முடியாது என்று சொல்வது ஏன்?
என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னால் பரவாயில்லை . உங்களுக்காக என்னுடைய வருவாயை , உச்சத்தை விட்டுட்டு வந்தேன் என்று சொல்லும்போது எங்களுக்கு ஒரு கேள்வி வருகிறது யார் உங்களை வரச் சொன்னார்கள் என்று? அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. சினிமாவை விட்டு விட்டு விஜய்யை அரசியலுக்கு வர சொன்னது யார்?
விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர், என்றைக்கும் எனக்கு தம்பி தான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? 50 ஆண்டுகள் கழித்து என்ன திட்டம் தரப் போறீங்க?
எல்லாம் தனியாருக்கு தான் தரப் போறீங்க. எல்லாத் துறைகளையும் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டால் நாடு வளருமா? இல்லை அந்தத் தனியார் முதலாளிகளின் வீடு வளருமா? ராணுவத்திற்கு மற்ற நாடுகளில் ஆயுதம் வாங்கிவிட்டு எந்த நாட்டோடு சண்டை போட்டு என்னை காப்பாற்ற போறீங்க? இவ்வாறு சீமான் கூறினார்.
