தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக, இலங்கையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் தமிழர்கள் பலர், தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். போதிய முகாம் இல்லாததால், கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்திருப்பது, மனதை கனக்க செய்கிறது.
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விமான நிலையத்தில், கடந்த மூன்று நாட்களாக, உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் அதிகமானோரை, தாயகம் அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், கனமழை வெள்ளத்தால், இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு, தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும்’ இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய பிளவு: உக்ரைனுக்கான €90 பில்லியன் கடனை ஹங்கேரி தடை செய்தது – குழாய் சேதம் பதற்றத்தை அதிகரிக்கிறது
- ஈரானின் விளிம்புநிலை: உயிர்க்கொல்லி அமைதியின்மை, மறைமுகப் போர் மற்றும் பிராந்திய மோதலின் நிழல்
- தூதரக சரிவு: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்குப் பிந்தைய அமெரிக்கா–ஈரான் முட்டுக்கட்டை
- தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா
- கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் டெக்சாஸில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.