வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், ‘புதிய விடியல்’ நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
- யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- இந்தியா–பங்களாதேஷ் உறவுகளில் புதிய திருப்பம்: கலேதா ஜியா மறைவுக்குப் பிறகு நவீன அணுகுமுறை
- த.வெ.க. எம்.எல்.ஏ. தன் பிறந்த நாள் மற்றும் வெற்றி கொண்டாட்டத்தில், கேக்கை வாளால் வெட்டியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- திருவையாறு கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- தமிழக அரசு சட்டவிரோத நியமனங்களைச் செய்து ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
- டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம்: அமெரிக்காவின் கவனம் மேற்கு அரைக்கோளத்தில்