கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி மோதினர். ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்தின் கிம்ப்ரெரேவை சந்திக்க உள்ளார்.
காலிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இன்று நடக்கும் அரையிறுதியில் அன்கிதா, தாய்லாந்தின் நக்லோவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7, 6-0, 10-5 என ஜப்பானின் ஒஜெகி, இந்தியாவின் ஷிவானி ஜோடியை சாய்த்தது.
- டி20 உலகக் கோப்பை: இத்தாலியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து
- “டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- மனஅழுத்தம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் தாக்குகிறது – இந்திய மனநல மருத்துவ சங்கம் வெளியிட்ட எச்சரிக்கை
- மெல்போர்னில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் ‘கரியர் ஸ்லாம்’ சாதனை நிறைவு
- உத்தரபிரதேசத்தில், குடிபோதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே புகையிலை தொழிலதிபரின் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
- புதிய இ-பாஸ்போர்ட் சேவையை இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று நடக்கும் பைனலில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி-சோஹா, ஆகான்ஷா ஜோடி மோதுகின்றன.