ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. பெர்த்தில் துவங்கிய இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (4) ஏமாற்றினார். ஷைபாலி வர்மா (35) ஓரளவு கைகொடுத்தார். பிரதிகா ராவல் (18), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (19), தீப்தி சர்மா (7), ரிச்சா கோஷ் (11) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52) அரைசதம் கடந்தார். ஸ்னே ராணா (5), சயாலி (7), கிராந்தி (1) சொப் ரன்னில் அவுட்டாகினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. காஷ்வீ கவுதம் (34*) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் 4, லுாசி ஹாமில்டன் 3, டார்சி பிரவுன் 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (2), லிட்ச்பீல்டு (9), கேப்டன் அலிசா ஹீலி (13) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 96/3 ரன் எடுத்திருந்தது. எல்லிஸ் பெர்ரி (43), அனாபெல் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சயாலி 2, கிராந்தி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- கலிநிங்ராட்: ஐரோப்பாவின் மிகவும் ஆபத்தான ‘சிவப்புக் கோடு’
- Global Markets Sway as Investors Flee Tech and Flock to Defence Amid Rising Geopolitical Tensions
- இங்கிலாந்து கொழும்பில் தொடர் வெற்றி: ஹாரி ப்ரூக், ஜோ ரூட் சதங்களால் 2–1 என ஓடிஐ தொடரை கைப்பற்றியது
- அட்லாண்டிக் காடு குறைவதால் கொசுக்களின் மனித இரத்தச் சாய்வு அதிகரிப்பு: ஆய்வு
- உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகுகிறார்கள்: உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சிகரமான அறிக்கை
- £40,000 செலவில் குப்பை அகற்ற வேண்டிய நிலை: விவசாயி அதிர்ச்சி