Home இந்தியாKolkata - கொல்கத்தாசொந்த மண்ணில் லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி

சொந்த மண்ணில் லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி

by Amizhthu
Logo collage of two IPL teams: Lucknow Super Giants and Kolkata Knight Riders on a purple patterned background, ready for a match promo button.

விறுவிறுப்பான லீக் போட்டியில், கொல்கட்டா அணி ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று, லக்னோவில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, கொல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கொல்கட்டா அணிக்கு மொசின் கான் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ டிம் செய்பர்ட் (0), கேப்டன் அஜின்கியா ரஹானே (10) வெளியேறினர். பிரின்ஸ் யாதவ் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய அங்கிரிஷ் ரகுவன்ஷி (9), ‘அப்ஸ்டிரக்டிங் தி பீல்டு’ விதிப்படி ஆட்டமிழந்தார். மொசின் கான் ‘வேகத்தில்’ ராவ்மன் பாவெல் (1), கிரீன் (34), அனுகுல் ராய் (0) வெளியேறினர்.

கொல்கட்டா அணி 15 ஓவரில் 93/7 ரன் எடுத்து திணறியது. ஷமி வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்த ரிங்கு சிங், திக்வேஷ் ரதி வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 4 சிக்சர் பறக்கவிட்டார்.

கொல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (83), சுனில் நரைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். லக்னோ அணி சார்பில் மொசின் கான் 5 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மார்ஷ் (2) ஏமாற்றினார். பின் இணைந்த மார்க்ரம் (31), கேப்டன் ரிஷாப் பன்ட் (42) ஜோடி நம்பிக்கை தந்தது. நிக்கோலஸ் பூரன் (9), முகுல் சவுத்ரி (1), லிண்டே (8) சோபிக்கவில்லை. ஆயுஷ் படோனி (24) ஆறுதல் தந்தார். வைபவ் அரோராவிடம் சரணடைந்தார்.

கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. கார்த்திக் தியாகி பந்துவீசினார். முதல் 5 பந்தில் 10 ரன் எடுக்க, கடைசி பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. இதில் ஷமி சிக்சர் விளாச, லக்னோ அணி 20 ஓவரில் 155/8 ரன் எடுத்து. போட்டி ‘டை’ ஆனது.

போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது. இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. கொல்கட்டா சார்பில் சுனில் நரைன் பந்துவீசினார். முதல் பந்தில் பூரன் (0) போல்டானார். இரண்டாவது பந்தில் கேப்பன் ரிஷாப் பன்ட் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் மார்க்ரம் (0) ஆட்டமிழந்தார். லக்னோ அணி 0.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு ஒரு ரன் எடுத்தது.

பின், 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் கொல்கட்டா களமிறங்கியது. பிரின்ஸ் யாதவ் பந்துவீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங் (4*) வெற்றியை உறுதி செய்தார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00