மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது.
இதனால் பயணிகள் 200க்கும் மேற்பட்டோர் கடும் அவதி அடைந்தனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்பையிலிருந்து லண்டனுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படவிருந்த விமானம் தாமதமாகி இன்னும் புறப்படவில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடக்கிறது. விமானம் மதியம் 1 மணிக்கு புறப்படும். பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
- ஜார்க்கண்ட் என்கவுன்டர்: தடைசெய்யப்பட்ட சிபிஐ சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- கனடாவிடமிருந்து யுரேனியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
- டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், டெயில்பைப்பில் தீப்பிடித்ததால், திரும்ப வேண்டிய கட்டாயம்!
- நாளை மறுநாள் முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை
- மும்பையில் பீஹார் தொழிலாளர்களுக்கான வீட்டு திட்டத்திற்கு ₹314.2 கோடி ஒதுக்கீடு