ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தார் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு
- இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்ஸ் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
- இரான்–இஸ்ரேல் பதற்றம் தீவிரமாவதை இந்தியா கவனமாக கண்காணிப்பு.
- “பண்டிகை காலங்களில் விமானக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்.” என்று விமான நிறுவனங்களுக்கு DGCA கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.