‘டி-20’ உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்றது இத்தாலி. நேற்று நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை, லீக் போட்டியில் இத்தாலி, நேபாள அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இத்தாலி, பீல்டிங் தேர்வு செய்தது.
முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோற்றது நேபாளம். இதனால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
மாறாக நேபாள அணி துவக்கத்தில் இருந்து தடுமாறியது. குஷால் 5 ரன்னில் திரும்ப, ஆசிப் (20), கேப்டன் ரோகித் பவுடல் (23) ஜோடி சற்று தாக்குப் பிடித்தது. திபேந்திர சிங், 17 ரன் எடுத்தார்.
நேபாள அணி 19.3 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.கரண் (18) அவுட்டாகாமல் இருந்தார். இத்தாலி சார்பில் கிரிஷன் 3, மனென்டி 2 விக்கெட் சாய்த்தனர்.
இத்தாலி அணிக்கு ஜஸ்டின் மோஸ்கா, ஆன்டனி மோஸ்கா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இத்தாலி அணி 6 ஓவரில் 68/0 ரன் குவித்தது.
- ஐரோப்பாவின் இறுதி முயற்சி: 2026 உலகக்கோப்பை பிளேஆஃப் தேதிகள் நெருங்குகின்றன
- அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்திய ராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம். – இந்திய பிரதமர் அழைப்பு
- ‘சந்திரயான்-4’ திட்டத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
- 32 ஆம் ஆண்டு மாபெரும் தமிழர் விளையாட்டு விழா – பிரித்தானியா
- சபரிமலை தங்க கவசம் எடை குறைவாக இருப்பது தொடர்பான விவகாரம்: கேரள உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜஸ்டின் 37 பந்தில் அரைசதம் அடித்தார். ஆன்டனி, 28 பந்தில் அரைசதம் கடந்தார். நேபாள அணி 12.4 ஓவரில் 124/0 ரன் எடுத்து வென்றது. ஜஸ்டின் (60), ஆன்டனி (62) அவுட்டாகாமல் இருந்தனர்.