முள்ளிவாய்க்கால் மே 18 இன், 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் இத்தாலியின் மேற்பிராந்தியத்தில் உள்ள பியல்லா, போலோனியா,ஜெனோவா, ரெச்சியோ எமிலியா மாநகரங்களில் இடம்பெற்றது.
மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்று கூடிய கவனயீர்ப்பு பேரணிகள் இடம்பெற்றுள்ளதுடன்.இத்தாலிய மக்களுக்கு தமிழின அழிப்பு நாள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் இளையோர்களாலும், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களாலும் வழங்கப்பட்டு அது குறித்த விளக்கங்களும் எடுத்துக் கூறப்பட்டது.
தமிழீழத்தேசியக் கொடியினை ஏற்றியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பிரதான ஈகைச்சுடரேற்றி வைத்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன நடைபெற்றது. மாணவர்களின் இத்தாலி மொழியில் தமிழின அழிப்பில் எமது இனம் அனுபவித்த வலிகளையும், எமக்கான நீதிகோரலையும் வலியுறுத்திய ஆக்கங்கள் இடம் பெற்றன.அத்துடன் எமது மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடல் இசைக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.