செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தின் அகழ்வாராய்ச்சியில் மேலும் ஆறு கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி புதைகுழியில் இருந்து 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.