ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து; கச்சா எண்ணெய் விலையில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் சரிவு.

ஈரான். அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இன்றைய சரிவ, கடந்த 4 மாதங்களில் இல்லாத சரிவாகும். ஈரான் ஏற்றுமதி வாய்ப்புகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து ஆகிய காரணங்கள் எதிரொலியாக சந்தை நிலவரத்தில் இநத மாற்றம் காணப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தியை வெளியிட்டு உள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 1.37 டாலர் சரிந்து, 75.71 டாலராக இருக்கிறது. பிப்.27ம் தேதிக்கு பின்னர் இப்போது தான் மிக குறைந்த விலையை எட்டி உள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.08 டாலர் சரிந்து 72.13 டாலராக குறைந்துள்ளது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் என்பது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர கச்சா எண்ணெய் ஆகும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிர்ணயித்தில் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

உலகச்சந்தையின் எண்ணெய் வர்த்தகத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது போன்ற காரணங்களே சந்தையின் போக்கை தீர்மானிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.