சென்னை | 03.11.2026
கடந்த 2016-2021 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக சி. விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கிறது; சி. விஜயபாஸ்கர் வரும் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமையும் , அவரது மனைவி ரம்யா அடுத்த வாரமும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024ம் ஆண்டில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தற்போது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை எழுப்ப அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.