மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி விடுதலை உணர்வோடு தமிழினம் வணங்குகின்றது.
எதிர் வரும் 2026 ஆண்டுக்கான மாவீரர் நாளினை முன்னிட்டு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 05/11/2026 நேற்று பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரரின் கல்லறைக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செய்யப்பட்டதுடன் சிரமதானப்பணிகளும் நடைபெற்றது.
இதில் மாவீரரின் உரித்துடையோர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.