Friday, November 6, 2026

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை

ஆகிய 7 மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது; நவம்பர் 15ம் தேதி வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Comment