அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழீழம்

யாழ்ப்பாணம், கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி நினைவேந்தலில் ஈடுட்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

மாவீரர் நாள் – உலகத் தமிழர்களின் எழுச்சிப் பிரதிபலிப்பு

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

உலகத்தமிழர்களால் மாவீரர்நாள் இந்த ஆண்டு மிகுந்த உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. ஈழத்தில் தொடர்ந்த அடைமழை, பலத்த வெள்ளம் மற்றும் கடும் காற்றையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தியாக வீரர்களுக்கு மரியாதை செலுத்தி ஒன்றுகூடியனர். இயற்கையின் கடின சூழல்களையும் மீறி வெளிப்பட்ட இந்தப் பெருந்திரள், தமிழர் மனத்தின் உறுதியையும் ஒருமைப்பாட்டையும் வெளிச்சமிட்டது.

இந்நிகழ்வின் முக்கியத் தருணமாக தலைவரின் மாவீரர்நாள் உரை ஒலித்தது. அது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமுதாயத்திற்கும் ஒரு தெளிவான அரசியல் செய்தியாக அமைந்தது. அந்தச் செய்தி உறுதியாக இதுவே:
தமிழரின் தாகம் – தமிழீழ தாயகம்.

மாவீரர்நாள் வெறும் நினைவு நாள் அல்ல; அது தியாகத்தின் தொடர்ச்சியை நினைவூட்டும் ஒரு வரலாற்றுச் சின்னம். ஈழத் தமிழர்களின் போராட்ட இலக்குகளும், அடையாளமும் இன்னும் உயிருடன் இருப்பதை இந்நாள் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த எழுச்சி, எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உறுதியையும் உறுதிப்படுத்தும் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பதிவாகியுள்ளது.

எழுதியவர் 
ஈழத்து நிலவன்
28/11/2025

Maaveerar Naal – A Reflection of Global Tamil Awakening

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Maaveerar Naal – A Reflection of Global Tamil Awakening

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

Maaveerar Naal was commemorated this year with profound emotion and collective spirit by Tamils across the world. In Eelam, despite relentless heavy rains, severe flooding, and strong winds, tens of thousands of people gathered to pay tribute to the fallen heroes. This massive turnout, in defiance of harsh natural conditions, stood as a powerful testament to the resilience and unity of the Tamil people.

A defining moment of the commemoration was the broadcast of the Leader’s Maaveerar Naal address. This speech conveyed a clear and unwavering political message not only to Tamils worldwide but also to the international community. That message was firm and unambiguous:
The thirst of the Tamil people is for the Tamil Eelam homeland.

Maaveerar Naal is not merely a day of remembrance; it is a historic symbol that reinforces the continuity of sacrifice and struggle. It has once again proven that the aspirations, identity, and political consciousness of the Eelam Tamil people remain alive and unbroken.

This powerful expression of solidarity stands recorded as a historic moment that strengthens hope and determination for the future.

Written by 
Eelaththu Nilavan
28/11/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 1 comment
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • திடீர் வெள்ளப்பெருக்கு
  • நிலச்சரிவு
  • மரங்கள் சாய்வது/வீழ்வது
  • கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை
    ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள்
  • வவுனியா – செடிக்குளம் – 315 மிமீ
  • முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ
  • கண்டி – 223.9 மிமீ
  • மன்னார், மடு – 218.5 மிமீ
  • இரத்தினபுரி – 208 மிமீ

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்:

  • அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்
  • அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்
  • வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி. மதுசா அவர்கள் வழங்கிய சிறப்புரை.

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் 2025 நிகழ்வில் அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. மதுசா அவர்கள் வழங்கிய சிறப்புரை.

இச் சிறப்புரையில் மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் 2009ற்கு பிறகு புலம்பெயர் தேசங்களில் எமது கட்டமைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஐக்கிய நாடுகள் சபைகளில் சிங்கள அரசின் கபட நாடகங்களையும் எடுத்துக்கூறியதுடன் எனிவரும் காலங்களில் எமது அடுத்த சந்ததி எவ்வாறு விழிப்புடன் தேசியம் சார்ந்து முன்னகர வேண்டும் என்றும் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
பிரித்தானியா

பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025’ம் ஆண்டின் நிகழ்வுகளின் தொகுப்பு

by Amizhthu 27 November 2025
written by Amizhthu

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025நிகழ்வுகளின் தொகுப்பு

பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..
அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்…
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு…
ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…
அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..
இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது..

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
27 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை  – 2025

by Amizhthu 27 November 2025
written by Amizhthu

தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

27.11.2025

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும்.

தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும்.

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள். 

இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது.

அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும்.

எமது அன்பிற்குரிய இளையோர்களே!

தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது.

எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே!

தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பார்ந்த மக்களே!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது.

இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும்.

சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும்.

அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும்.

“நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும்.

எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
27 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

தாழமுக்கமாக விருத்தியடைந்து “டித்வா” சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் !

by Amizhthu 27 November 2025
written by Amizhthu

இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 210 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடையும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து அதாவது நாளையளவில் சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளிக்கு எமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட “டித்வா” ( Ditwah ) அதாவது இயற்கையால் அமைந்த ஏரி எனும் பெயர் சூட்டப்படலாம். இதன் தாக்கத்தின் காரணமாக நிலவுகின்ற பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை நாடு முழுவதிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாடு முழுவதிலும்  வானம் முகில் செறிந்து காணப்படுவதுடன் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை செய்வதுடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு  அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல  வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில்  வடகிழக்குத்  திசையில் இருந்து வட திசையை நோக்கி  காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 4.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
27 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Poem - கவிதை

ஆண்டு பல்லாண்டெனவெ பூத்திருப்பாய் ஐயா. புலித்தலைவா! நீ வாழ்க – புதுவை இரத்தினதுரை

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!

பகைவருக்கு

மாயாவியான மனிதா  !

வையமெல்லாம்

ஓயாத அலைதன்னை

உறுணரச் செய்ததினால்

சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !

கார்த்திகை 26 உனக்கு

பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.

எம்மண்ணில்

தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.

காலை வந்த

காற்றில் வாழ்த்துரைத்தோம்

காதினிலே கேட்டதுவா?

ஆற்றல் திருவே !

ஆண்டு பல்லாண்டெனவெ

பூத்திருப்பாய் ஐயா.

புலித்தலைவா! நீ வாழ்க.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

வரலாறு உருவாக்கிய வழிகாட்டி

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

எக்காலத்திலும் எவராலும் ஏற்றுப்போற்றக்கூடிய உன்னத தலைவன். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே… உள்ளோடி…. குருதிக்கலங்களில் வீரத்தையும் மானத்தையும் பொங்கியெழச் செய்யும் வல்லமை…. 

உலகவரலாற்றில் காலத்துக்கு காலம் தலைவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.. ஆனால் காலத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற தலைவன் எங்கள் பிரபாகரன் அவர்களே!

ஆண்டுகள் பலவாய் அழுது துடித்திருந்தது தமிழரினம். தமிழர்களின் முன்னாள் அரசியல் தலைவர்கள் அமைதிவழிப் போராட்ட வழிமுறைகளினால் எமது உரிமைகளைப் பெற்றுவிடலாம் என நம்பினார்கள். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்கள்… ஆனால் தமிழர்களின் உரிமைப்போரை முளையிலேயே நசுக்கிவிட எண்ணிய சிங்களப்பேரினவாதம் அமைதிவழியில் போராடிய தமிழ்த்தலைவர்களையும் தமிழ்மக்களையும் ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கியது. இலங்கைத்தீவு முழுவதிலும் தமிழரின் குருதி வழிந்தோடியது….

இந்நிலையில்தான்… 

‘ எங்களுக்காக குரலெழுப்ப… கொடுந்துயரங்களிலிருந்து எங்களை மீட்க ஒருதலைவன் பிறந்துவரமாட்டாரா… ?’ என எம்மினம் ஏங்கிக் கிடந்தது. அந்த வேளை… 

மேகம் அடித்துப்பொழிய… மின்னல் வானத்தை பிளந்தெறிய… கடலலைகள் அடித்துப் புரள….. வல்வெட்டித்துறையெனும் வரலாற்று மண் எங்கள் வீரத்தலைவனைப் பெற்று மகிழ்ந்தது.

ஈழத்தமிழர்களின் இருண்டுகிடந்த வாழ்வில் ஒரு புதிய சூரியன் பிரபாகரனாய் உதித்தது! 

எங்கள் தலைவனின் முகத்தில் தெரிந்த அமைதிக்குள் ஆழ்ந்திருந்த வீரம்… காலத்தின் கணிப்பில் அக்கினியாய் பிரவாகமெடுத்தது. பதினாறு வயதில் தன் இனத்தின் அடிமைவிலங்கை உடைத்தெறிய திடசங்கற்பமேற்றார் எங்கள் தலைவர்!

அடிப்பவனுக்கும் அதன் வலி தெரியவேண்டும். இதுதான் எங்கள் தலைவனின் உள்ளத்தில் உதித்த பேரெண்ணம். 

ஆயுதங்களால் எம்மை அடக்க நினைப்பவர்களிடமிருந்து வெற்றுக்கைகளால் இரந்து… எமக்கான உரிமைகளை மீட்கமுடியாது என்பதை எம்தலைவர் உறுதியாகத் தெரிந்துகொண்டார். 

வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க… மக்கள்விடுதலைப் படையை உருவாக்கிய நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கை வரலாறு எம் தலைவருக்கான வரலாற்றின் அரிச்சுவடியாய் வழிகாட்டியது….

வலிமை! இதுதான் எங்கள் தலைவர் ஏற்றுக்கொண்ட ஆயுதம். வலிமையற்றிருக்கும் எந்த இனமும் தலைகுனிந்து அடிமையாகிப் போவதுதான் காலம் சுட்டிக்காட்டிய பாடம்….. 

எனவேதான் விடுதலைப்புலிகள் என்னும் பெரும்படையை உலகிற்கு எடுத்துக்காட்டாக உருவாக்கினார். இப்படையின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வழுவாத வீரமும் உலகின் விழிகளை வியக்க வைத்தன…..

தரை, வான், கடலென்ற முப்படைப்பிரிவுகளையும் நேர்த்தியாக வழிநடத்திய தனிப்பெருந் தலைவர்!

காலங்காலமாய் அடிமைச்சுழலில் சிக்கித்தவிக்கும் தமிழினம்… அதிலிருந்து விடுபட்டு,  வலிமைமிக்க இனமாகத் தலைநிமிர்ந்து வாழவேண்டும் அவரது இலட்சியம்…..

தனக்கென்றோர் மொழி… தனித்துவமான கலை பண்பாடு, வாழ்க்கை நெறிமுறைகள் எல்hவற்றையும் கொண்ட தொன்மைமிக்க தமிழினத்தை தோளுயர்த்த வைக்க அவர்; செயலாற்றத் தொடங்கினார்.

செயல்…. சொல்லுக்கு முன்னால் எப்போதும் செயலிருக்க வேண்டும் என்பதையே  எங்கள் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்கள் வகுத்திருந்தார். மேடைகளில் முழங்கிவிட்டு… வீடுகளுக்குள் முடங்கிப்போகும் வாழ்வுமுறையை அவர் வெறுத்தார். 

வழிவழியாக அவநம்பிக்கைகளுக்குள் புதைந்திருந்த மனங்களில் நம்பிக்கையின் வெள்ளொளியைப் பாய்ச்சும் ஒளிமுதலாய் உருவெடுத்தார் எம்தலைவர். 

‘ விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி… ‘ என்றார் அவர். 

மானத்தமிழர்களின் வீரத்தை உரைத்துநிற்கும் புறநானூறு சொல்வதுபோல், ‘வழிபடுவோரை வல்லறிந்த ‘ தலைவனாய் எம்முடனிருப்பவர். 

ஒன்றாய்.. இரண்டாய்… ஒவ்வொன்றாய்… மக்களுடைய மனவெளிகளில் நம்பிக்கைதரும் நாற்றுக்களை அவர் நாட்டினார். இயலாமையின் உச்சக்கட்டத்தில் விரக்தியுற்றிருந்த மனிதர்களை…. வாய்ச்சொற்களால் மாற்றியமைக்காமல்… தனது முழுமையான செயற்பாடுகளால் மாற்றியமைத்தார் அவர்..

எம்மைத் தொடர்ந்து அடிமைப்படுத்த நினைக்கும் ஒடுக்குமுறையாளர்கள்… எமது வளர்ச்சியைப் பொறுக்க முடியாது…. எம்மைப்பணிய வைப்பதற்காய் ஒருகட்டத்தில் பொருளாதாரத்தடையை எம்மீது செலுத்துவார்கள் என்பதை அவர்; தீர்க்கதரிசனமாகச் சிந்தித்திருந்தார். 

அவர் எண்ணியதுபோலவே ஸ்ரீலங்கா அரசு முந்நூற்றுக்கு மேற்பட்ட பொருட்களை தமிழர்பகுதிகளுக்கு செல்லவிடாது பொருளாதாரத் தடையை திணித்தது.  

அவ்வேளை…. அவரது சிந்தனையில் பொருண்மியக் கட்டமைப்பு பிறப்பெடுத்தது. 

அதனால் எம் தரிசுநிலங்கள் பூப்பெய்தின… உணவுப்பயிர்களும் சிறுதானியங்களும் சுயஉற்பத்திகளும் பெருகின…. உள்ளுர் உற்பத்தியாளர்கள் தலைநிமிர்ந்தார்கள்…  பிச்சையெடுத்தலோ… பட்டினிச்சாவோ… எம்மண்ணில் இல்லையென்றானது…

பெண்வழிச் சமுகமான எம்தமிழ் சமுகத்தில்… பெண்கள் இரண்டாம் நிலைமனிதர்களாக அடக்கப்பட்டிருந்தார்கள். அறியாமையென்னும் பேரிருளில் ஆழப் புதைந்திருந்தது பெண்சமுகம். 

மண்விடுதலையோடு பெண்விடுதலையையும் இணைத்துக்கொண்டார் தலைவர் பிரபாகரன் அவர்கள். பெண்ணைப்பழித்தும் இழித்தும் நின்றவர்கள் திகைத்துப்போகும் படியான வீரத்தையும் விடுதலையுணர்வையும் பெண்களுக்குள் உருவாக்கினார் எம் தலைவர்!

இருளை ஊடறுக்கவும், காடுகளில் கரந்துறையவும், நீரின் அடியிலே நீள்பயணஞ் செய்யவும், வானத்தை தொட்டுச்செல்லவும் பெண்களை வளர்த்தெடுக்க ஆண்தாயாக மாறியவர் அவர். 

அவரது மேலான எண்ணத்தின் உருவாக்கங்களாக அறிவியல், ஊடகம், கல்வி, அரசியல், நிர்வாகம், என எண்ணற்ற துறைகள் உருவாக்கப்பட்டு, அனைத்திலும் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. 

சமுக அங்கீகாரமில்லாது நலிவுற்றிருந்த கலைத்துறைக்கு எம்தலைவர் புத்துயிர் அளித்தார். தேசத்தின் மூலைகளில் வறுமையுடன் போராடியபடி முடங்கிக்கிடந்த பலநூற்றுக்கணக்கான கலைஞர்கள் வெளியுலக தரிசனம் பெற்றார்கள்…. 

போரியல் வரலாற்றில் மட்டுமல்லாது மனிதவாழ்க்கைக்கும் பயனளிக்கும் வகையிலான புதிய உத்திகளை எம்மினத்திற்கு எடுத்துச்சொல்லியவர். ஆனாலும் எம் தலைவர் ஒருபோதும் போதித்தவரல்ல… மாறாக மேலாண்மைத் திறனோடு தானே பிறர்க்கு வாழ்ந்து காட்டியவர்….

எங்கள் தாய்மண்ணிலே நிர்க்கதியாக யாரும் நின்றலையக்கூடாதென்ற பெருநோக்குடன் சிறுவர்காப்பு இல்லங்களையும்.. மூதாளர்; இல்லங்களையும் தோற்றுவித்து…. அவர்களை பாதுகாத்துப் பேணிய பெருமை எம் தலைவருக்கே உரித்தானது…..

பல்வேறு நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமுகத்தின் கேலிக்குரியவர்களாய் ஆகிவிடக்கூடாதென்பதற்காய்… அவர்களின் பிரச்சினைகளை உய்த்தறிய பெண்கள் ஆய்வுநிறுவனத்தையும்… அவர்களை சொந்தக்கால்களில் வாழவைக்க பெண்கள் புனர்வாழ்வுக் கழகத்தையும் அமைத்த நுண்திறன் கொண்டவர்!

போரில் விழுப்புண்ணுற்ற போராளிகள் கவனிப்பாரற்ற நிலையில் கையேந்துபவர்களாகிவிடக் கூடாதென்ற தூரநோக்குச் சிந்தனையோடு…. அவர்களுக்காக… ஒரு கட்டமைப்பை உருவாக்கி… நேரடியாக அவர்களின் குறைநிறைகளில் அக்கறை செலுத்தியவர்….

போர்நெருக்கடிகளுக்குள் வாழும் மக்கள் நடுவே… குற்றச் செயல்கள் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காக தமிழீழக் காவற்றுறை எனும் நிர்வாக அலகைத் தோற்றுவித்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தியதுடன்… காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பது, சமுகத்தை நெறிப்படுத்துவது என்பதை எல்லோருக்கும் புரியவைத்தார். 

உலகநாடுகளும்… மக்களும் அவரது எளிமையையும் வலிமையையும் புகழ்ந்து நின்றபோதும்…. இறுமாப்பற்று… எளிமையாகத் திகழ்ந்தவர்…. மனிதத்தை மதித்துப் போற்றியவர். மானுட விழுமியங்ளை காத்தவர்…. 

அன்பும் கருணையும் காதலும் வீரமும் நிறைந்த பேராளன் எம்தலைவர் பிரபாகரன் !

எங்கள் தலைவர்தான் எங்களின் தேசத்தின் குறியீடு. எமது இனத்தின் உன்னத அடையாளம்…. 

அடிக்கவரும் கைகளை உடைத்து, தடுக்கவரும் தடைகளைத் தகர்த்து, முடியாதென்ற நிலைமைகளை முடித்து பெரும் வரலாற்றுப்பயணத்தில் வீரநடை காட்டியவர்!

கூர்மையான போரியல் திட்டங்களை வகுத்து… எதிரிகள் இறுமாந்திருந்த எத்தனையோ படைமுகாம்களைத் தகர்த்து… வெற்றிகளை எமக்காக்கிய எம் தலைவர்!

நெல்லியடி அவரின் நெற்றியடி!

பலவீனப்படுத்pவிடத் துடித்த எதிரிக்கு தமிழன் யாரெனத் தெரியவைத்த ஒற்றையடி!

பூநகரியின் ஈரூடகத் தாக்குதல் ஊடாக எதிரியைக் கதிகலங்கவைத்தவர்…. ஆனையிறவு எதிரிகளுக்கு அடுத்த அதிரடி….  

மணலாற்றுக் காட்டில் கால்பதித்த இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு படையினனும் தமிழ்வீரத்தை வீரத்தை தெரிந்துகொள்ள வைத்தவர் எம் தலைவர்!

யாழ்குடாநாட்டைவிட்டு துரத்திவிட்டோம்… தொலைந்தது தொல்லை என பகைவன் நினைத்திருந்தபோது தான்  பகைக்குகை முல்லைத்தீவில் நிர்மூலமாக்கப்பட்டது!

வலிமை! இதைத்தான் தன்னுடைய ஒவ்வொரு வீரனுக்கும் எம்தலைவர் சொல்லிக் கொடுத்தார்… நாங்கள் வலிமையாக இருக்கும்வரை எதிரி பணிந்திருப்பான் என்பதே அவர் கற்றுத் தந்த பாடம்!

தோல்விகளையோ பின்னடைவுகளையே நெஞ்சுநிமிர்த்தி நேருக்கு நேராகச் சந்திக்கும் நேர்மை கொண்டவர்… எமது போராட்டம் சதுரங்க விளையாட்டு என்றால் … அதிலே  துல்லியமாக காய்களை நகர்த்தும் வல்லமை எம் தலைவர்!

சிங்களப்பேரினவாதம் கோபங்கொண்டு கோரப்பற்களோடு நெருங்கிவந்த வேளையெல்லாம்…. அதன் துடுக்கடக்கி தமிழினத்தை பாதுகாத்தவர் அவர்…. 

தன்னினத்தை பாதுகாப்பதற்காய் முப்பெரும் படைகளை உருவாக்கி… தரை, வான், கடல் முழுவதையும் ஈழத்தமிழரே கட்டியாண்ட பெரும்பேற்றை… உலகமே வியந்து பார்க்கும் வகையில் வளர்த்தெடுத்த தலைவர்!

மக்களை அரசியல்மயமாக்காது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பது இலகுவானதல்ல என உரைத்த எம்தலைவர், அரசியல்பணி என்பது மக்களுக்கு சேவையாற்றுவது என்பதையும் சொல்லிவைத்தார்…… அதனூடாக மக்களையும் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்கவைத்து…. தமிழர்தாயக விடுதலைப் போராட்டமென்பது…. மக்கள்போராட்ட வடிவமாக முன்நகரச் செய்தார்!

தாயகம்!

தேசியம்!!

தன்;னாட்சியுரிமை!!!

இவைதான் தமிழனின் இதயத்தின் ஒலியென உணர்த்தியவர் எம் தலைவர்!

எளிமையான வாழ்க்கையும்… தனித்துவமான சிந்தனையும்… எத்தடைகளையும் தகர்த்தெறிந்து தன் இலக்குநோக்கிப் பயணிக்கும் பேராற்றலும்…. தன் அணியினரை சிறப்பாக வழிநடத்தும் மிடுக்கும்… குலையாத இலட்சிய உறுதியும் கொண்டவர் …. 

எமக்கு ஒரு நாடுவேண்டும்!

எமது மக்களுக்கு விடுதலைவேண்டும்!

எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும்!

இவைதான் எமது தேசியத் தலைவரின் இலக்குகள்.

 போத்துக்கேயர்களுக்கும், ஒல்லாந்தர்களுக்கும், பின்னால் வந்த ஆங்கிலேயர்களுக்கும் சிம்ம சொப்பனமாகி, தமிழன் என்கின்ற பெயரைக்கேட்டாலே நடுநடுங்க எம் வைத்த முன்னோர்களின் வீரம்…. மீண்டும் எம்மண்ணில் தளைத்தது எங்கள் தலைவர் பிரபாகரன் காலத்தில்!

இயற்கை எனது நண்பன்…

வாழ்க்கை எனது தத்துவாசிரியன்….

வரலாறு எனக்கு வழிகாட்டி… என வரித்துக்கொண்டவர் அவர்!

குறைவாகப் பேசவும்… நிறைவாக வேலைசெய்யவும் எடுத்துக்காட்டானவர்…. நான் என்கின்ற கர்வமின்றி… நாங்கள் எனச் சிந்தித்து செயலாற்றும் பண்புகளின் பிறப்பிடம் அவர்…. 

தாயகவிடுதலையின் பயணத்தில் இணைந்து, தங்கள் உயிர், பொருள்,ஆவியென அனைத்தையும் விடுதலைக்காய் அர்ப்பணித்த… மாவீரர்களையும் அவர்தம் பெற்றோர் உறவுகளையும் மதித்துப்போற்றியவர். மாவீரர்களை மனதிருத்தி தொழுதவர்!

களத்தில் பெருவெற்றிகளையும் உலக அரசியலில் பல மாற்றங்களையும் நிகழ்த்துவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மின உறவுகள் அளித்த பங்களிப்பை எப்போதும் விதந்துரைத்தவர்… புலம்பெயர் இளையோரின் செய்றபாடுகளை ஊக்குவித்து,… உலக அரங்கில் எமது இனத்தின் பிரச்சினைகள் பேசப்படவேண்டும்… அதனூடாக எமது இனம் காலாதிகாலமாக பட்டுத்துடிக்கும் இன்னல்களை வெளியுலகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என எண்ணியவர்!    

தர்மமும் சத்தியமும் எப்போதும் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை என்கின்ற உணர்வை எப்போதும் உணர்த்துபவர்…

„ சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது… „  என்கின்ற வள்ளுவனின் கூற்றிற்கு அமைவாக எவராலும் வெல்லப்பட முடியாத தலைவனைப் பெற்றவர்கள் நாம்.  

இத்தனைசிறப்புகளும் கொண்ட தலைவனைப் பெற்ற நாம் பெருமிதப்படவேண்டியவர்கள்! 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Poem - கவிதை

மாவீரர் கவிதை – ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

மாவீரர் கவிதை

மாரிமழை பொழியும். மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.
மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.
குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான‌
புதுவாழ்வின் புலர்வுதினம்.
புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.
தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச்
சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.
பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர‌
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ…!!!

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Poem - கவிதை

உலகமுள்ளவரை உனக்கு வயது – ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

ஐயநின் மேனியின் அழகதும்,

நெஞ்சினில்

அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,

அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்

அரவணைக் கின்ற பேரழகும்,

வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்

விரிகின்ற கோபத்தின் அழகும்

விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே

விட்டறி யாதநின் அழகும்,

பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்

புலியென நிமிர்த்திய அழகும்,

புவியினில் இன்றுள தமிழரின் வாயெல்லாம்

பேசிடும் உன்பெயர் அழகும்

வையகம் உள்ளள வாகுக, அதுவரை

வயதுக் காகுக அழகா.

வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்

வாசலில் வாழுக தலைவா.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d