அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

சர்வதேசச் செய்திகள்

டைட்டானிக் பயணியின் தங்கக் கடிகாரம் ஏலத்தில் உலகச் சாதனை விலை

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

இங்கிலாந்தின் வில்ட்ஷையரில் நடைபெற்ற ஏலத்தில், டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த முதல் தர பயணி இசிடோர் ஸ்ட்ராஸ் அவர்களின் 18 காரட் தங்கக் கடிகாரம் £1.78 மில்லியன் (சுமார் ₹18.5 கோடி) விலையில் விற்கப்பட்டது. இது இதுவரை டைட்டானிக் தொடர்பான நினைவுச்சின்னங்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விலை என ஏல நிறுவனமான Henry Aldridge & Son உறுதிப்படுத்தியது.

  • இசிடோர் ஸ்ட்ராஸ், அமெரிக்காவின் பிரபல Macy’s department store-இன் இணை உரிமையாளர், 1912 ஏப்ரல் 14 அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது தனது மனைவி ஐடா ஸ்ட்ராஸ் உடன் உயிரிழந்தார்.
  • அந்த இரவு, அவருக்கு வயதின் காரணமாக உயிர் காப்புக் கப்பலில் இடம் வழங்கப்பட்டபோதும், அவர் மறுத்து, “மற்ற ஆண்கள் முதலில் செல்ல வேண்டும்” எனக் கூறினார்.
  • ஐடா தனது கணவரை விட்டு பிரிய மறுத்ததால், இருவரும் கடைசியாக கப்பல் மேடையில் ஒன்றாக அமர்ந்தபடி காணப்பட்டனர்.
  • இசிடோரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட இந்தக் கடிகாரம், 1888-ஆம் ஆண்டு அவரது 43வது பிறந்தநாளில் பரிசாக வழங்கப்பட்டது.
  • கடிகாரம் 02:20 மணிக்கு நிறுத்தப்பட்டது – அதே நேரத்தில் டைட்டானிக் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
  • இந்தக் கடிகாரம் தலைமுறைகள் வழியாக குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு, சமீபத்தில் ஏலத்தில் விற்கப்பட்டது.

ஏலத்தில்,

  • ஐடா ஸ்ட்ராஸ் எழுதிய கடிதம் £100,000 விலையில்,
  • பயணிகள் பட்டியல் £104,000 விலையில்,
  • RMS Carpathia கப்பல் குழுவினருக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் £86,000 விலையில் விற்கப்பட்டது.
    மொத்தமாக, டைட்டானிக் நினைவுச்சின்னங்கள் £3 மில்லியன் மதிப்பில் விற்கப்பட்டன.

இந்த உலகச் சாதனை விலை, டைட்டானிக் கதையின் நிலையான ஈர்ப்பு மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு உலகளாவிய ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. 113 ஆண்டுகள் கடந்தும், அந்தக் கப்பலில் பயணித்த ஒவ்வொரு மனிதரின் கதையும், இத்தகைய நினைவுச்சின்னங்கள் மூலம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இசிடோர் மற்றும் ஐடா ஸ்ட்ராஸ் தம்பதியரின் “காதல் மற்றும் தியாகம்” கதை, இன்றும் உலகம் முழுவதும் மதிப்புடன் நினைவுகூரப்படுகிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

இடைக்கால அமைதி உடைந்து, காசா மற்றும் மேற்கு கரையில் வன்முறை அதிகரிப்பு

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

காசாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்கள் மற்றும் மேற்கு கரையில் மோதல்கள் இந்த வாரம் பல உயிர்களை பறித்துள்ளன. அக்டோபரில் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அமைதி உடைந்து போகும் அபாயம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் போராளிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறினாலும், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீன அதிகாரிகள், இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

நவம்பர் 22 அன்று, காசா நகரம், டெயர் எல்-பலா மற்றும் நுசெய்ரத்தில் குறைந்தது 22 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர். சில நாட்களுக்கு முன்பு, ஜெய்தூன், ஷெஜையா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் நடந்த தனித்தனி தாக்குதல்களில் மேலும் 25 பேர் உயிரிழந்தனர். தன் படையின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிப்பதாக இஸ்ரேல் கூறினாலும், ஹமாஸ் இதை அமைதி ஒப்பந்தத்தை மீறிய ஆபத்தான நடவடிக்கையாக கண்டித்துள்ளது.

இதற்கிடையில், மேற்கு கரையில் வன்முறை அதிகரித்துள்ளது. பாலஸ்தீனர்கள்மீது குடியேற்றக்காரர்கள் மற்றும் இராணுவம் நடத்திய தாக்குதல்கள் சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் தங்குமிடங்கள் மற்றும் மதக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

மீண்டும் வெடித்த வன்முறை, இடைக்கால அமைதி எவ்வளவு பலவீனமானது என்பதை வெளிப்படுத்துகிறது. நிலையான அமைதியை உருவாக்குவது எவ்வளவு சவாலானது என்பதையும் காட்டுகிறது. சர்வதேச நடுவர் முயற்சிகள் தொடர்ந்தாலும், உதவி அதிகரித்தாலும், ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் இஸ்ரேல் இடையிலான ஆழமான அரசியல் பிளவுகள், தீர்வுக்கான பாதை இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

‘இந்தியப் பிரதமரைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’: தமிழக முதல்வரின் கடிதம்

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

‘கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க, என் குழுவுடன், தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என, இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

கடந்த மே 24, ஜூலை 26ல், தங்களை சந்தித்தபோது, கோவை, மதுரை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி மனு அளித்திருந்தேன். ஆனாலும், அவற்றின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

நீக்க வேண்டும் இதற்காக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை. கடந்த 2017ல் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையின்படி, 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியும்.

கோவை மக்கள்தொகை, 2011ல் 20 லட்சத்தை தாண்டிவிட்டது. மதுரையிலும், எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும்.

இந்த அளவுகோல் ஒரே மாதிரியாக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்துார், பாட்னா போன்ற நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி இருக்க வாய்ப்பில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசின் பாகுபாட்டையே காட்டுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோலை நீக்க வேண்டும்.

கோவை நகர பயணியரின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணியரின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு முடிவு செய்யப்பட்டது பொருத்தமானதல்ல. கோவையும், மதுரையும், சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன.

விரிவான ஆய்வுகளுக்கு பின், ‘ரைட்ஸ்’ நிறுவனம் தயாரித்த கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, அதன் தேவையை தெளிவாக கணித்துள்ளது.

மறுபரிசீலனை மதுரைக்கு மெட்ரோ ரயில் அமைப்பை ஏற்படுத்தலாம் என, 2011ம் ஆண்டின் விரிவான இயக்க திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கவனத்தில் கொள்ளவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்தது.

நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகை யில், தமிழகத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் தடை இருக்காது. அதை தமிழக அரசு உறுதி செய்யும்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு, விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக சிறப்பு முயற்சிகள் துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்.

எனவே, இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட்டு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க, என் குழு வுடன் தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

திருப்பதி கோவிலில் 20 கோடி கலப்பட நெய் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

“திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த, 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், 49 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை,” என, தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் திருப் பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

விசாரணை இங்கு, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ‘டெண்டர்’ விடப்பட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நெய் பெறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அவ்வாறு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இதில், உத்தரகண்டைச் சேர்ந்த, ‘போலே பாபா’ பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய்யை திருமலை கோவிலுக்கு வினியோகித்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் சமீபத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., குழு, அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உபன்னாவை கைது செய்தது.

இந்நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தான தற்போதைய தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்டுள்ளார்.

புள்ளிவிபரம் அவர் கூறுகையில், “கடந்த, 2019 – 2024 வரையிலான காலக்கட்டத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, 48.76 கோடி லட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை.

”கோவிலில் தினசரி மக்கள் வருகை, கொள்முதல் விபரங்கள், லட்டு உற்பத்தி மற்றும் விற்பனை புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து எளிய கணக்கீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது,” என்றார்.

‘இந்த ஐந்து ஆண்டுகளில், 11 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும், கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

‘வி.வி.ஐ.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள் கூட கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாது’ என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு – திருகோணமலை

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22.11.2025) காலை இடம்பெற்றது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்களோடு,மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அடுத்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள், ஊடக அடக்குமுறைகளுக்கு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்.

by Amizhthu 23 November 2025
written by Amizhthu

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சனிக்கிழமை (22.11.2025) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில், பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,

கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்தியமைக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

லெபனான் எல்லையில் இஸ்ரேல்–ஹெஸ்பொல்லா பரிமாற்றத் தாக்குதல்கள் தீவிரம் பெறுகின்றன

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பரிமாற்றத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தெற்கு லெபனானில் பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் இடம்பெயர்வு அதிகரித்துள்ள நிலையில், இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் தெரிவித்ததாவது: “ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலாக, எங்கள் விமானப்படை தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.”

ஹெஸ்பொல்லா தரப்பில், “இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் நடவடிக்கைகள் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

லெபனான் அரசியல் வட்டாரங்களில், பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து கடும் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மனிதாபிமான நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது,” என ஒரு லெபனான் மனித உரிமை செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.

சர்வதேச அமைப்புகள், இரு தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றன. ஐ.நா. பேச்சாளர் ஒருவர், “எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை, பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடனடி தணிக்கை அவசியம்” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல்–ஹெஸ்பொல்லா பரிமாற்றத் தாக்குதல்கள், காசா போரின் பரவலான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சவால்களை அதிகரிக்கிறது. இந்த நிலை, எதிர்காலத்தில் பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச தூதரக முயற்சிகளுக்கு முக்கிய சோதனையாக அமையக்கூடும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

A Message of Gratitude for the Recognition of Tamil Eelam National Flag Day

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

We extend our sincere gratitude to the City of Brampton and the Mayor’s Office for officially recognising Tamil Eelam National Flag Day and for hosting the community flag raising at Ken Whillans Square.

This meaningful recognition honours the collective identity of the Eelam Tamil nation and acknowledges the resilience, history, and ongoing struggle of our people. Your continued commitment to inclusivity, respect for human rights, and support for the Tamil community reflects the true spirit of Canadian multiculturalism and solidarity.

We deeply appreciate the City’s efforts in standing with the Tamil community and celebrating the significant contributions of Tamil residents to Brampton’s cultural, social, and economic life.

Thank you for your leadership, compassion, and unwavering support.

With respect and gratitude,
Written by: Eelaththu Nilavan
Tamil National Historian | Global Politics, Economics, Intelligence & Military Analyst

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
பிரித்தானியா

தமிழீழ தேசிய கொடி நாள்: City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

தமிழீழ தேசிய கொடி நாளை அங்கீகரித்து, கென் வில்லன்ஸ் சதுக்கத்தில் சமூக கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அர்த்தமுள்ள அங்கீகாரம், ஈழத் தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தையும், அவர்கள் எதிர்கொண்டு வரும் இன அழிப்பு அநீதிக்கெதிரான தொடரும் எதிர்ப்பையும் மரியாதையுடன் அங்கீகரிக்கிறது. மனித உரிமைகளுக்கான உங்கள் உறுதிப்பாடு, பன்முகப் பண்பாட்டை மதிக்கும் அணுகுமுறை மற்றும் தமிழ் சமூகத்துக்கான ஆதரவு ஆகியவை கனடிய ஒற்றுமையும் இலக்கணமான சமத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன.

பிராம்ப்டன் நகரின் சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழர்கள் வழங்கியுள்ள மதிப்புமிக்க பங்களிப்புகளை கொண்டாடும் உங்கள் முயற்சிகளுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

உங்கள் தலைமை, கருணை மற்றும் உறுதியான ஆதரவுக்காக எங்களுக்கு எப்போதும் பெருமையும் நன்றியும் உண்டு.

மிகுந்த மரியாதையுடன்,

ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர்

உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும்
இராணுவ ஆய்வாளர்.


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

கர்நாடகாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

கர்நாடகாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் உடுப்பி மல்பேயில், ‘கொச்சி ஷிப்யார்டு’ நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. நம் கடற் படைக்கு இங்கிருந்து தான், கண்காணிப்புப் பணிக்கான இழுவை படகுகள் தயாரிக்கப்படுகின்றன.

கப்பல் கட்டும் தளத்தில் பணி செய்யும் ஊழியர்கள் சிலர், தளத்தின் தகவல்களை வேறு யாருக்கோ கொடுப்பதாக மல்பே போலீஸ் நிலையத்தில் அந்த நிறுவனம் புகார் அளித்தது.

போலீசா ர் நடத்திய விசாரணையில், கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்த உத்தர பிரதேசத்தின் ரோஹித், 29, சாந்த்ரி, 37, ஆகியோர், கப்பல் கட்டும் தளத்தின் கட்டுமானம், பழுதுநீக்கும் பணிகள் குறித்து, ‘வாட்ஸாப்’ மூலம் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியது தெரிந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி, திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ‘அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இந்த விவகாரம், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ், 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. அந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.

இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d